Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

பொங்கல் எந்த திசையில் பொங்கினால் நல்லது தெரியுமா?

A
Admin User
Journalist
January 09, 2023 1 min read 45 views
பொங்கல் எந்த திசையில் பொங்கினால் நல்லது தெரியுமா?

In Which Direction Pongal Should Flow: பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. சூரிய பகவான், இந்திர பகவான், விவசாயத்திற்கு உதவும் கால்நடைகள் என நமக்கு உணவளிக்கும் தெய்வங்களை போற்றி வழிபடும் திருவிழா தான் பொங்கல் பண்டிகை. 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கலின் சிறப்பம்சமே, வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டு பிரார்த்திப்பது தான்.

அப்படி பொங்கல் வைக்கும் போது, முதலில் பொங்கல் பானையில் அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைப்பர். அது பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு பொங்கலை கொண்டாடுவர். அப்படி பொங்கல் பொங்கி வரும் போது, எந்த திசையில் பொங்குகிறது என்பதை பொதுவாக அனைவருமே பார்க்கும் வழக்கமுண்டு.

இந்த பொங்கலுக்கு வித்தியாசமான பொங்கல் செய்ய விரும்பினால், கரும்புச்சாறு பொங்கலை முயற்சி செய்து பாருங்கள்

பொங்கல் பொங்கும் திசையைப் பொறுத்து நம் முன்னோர் ஒவ்வொரு பலன்களை கூறியுள்ளனர். எனவே, பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

கிழக்கு

கிழங்கு திசையில் பொங்கல் பொங்கினால் மிகவும் நல்லது. நீங்கள் வைக்கும் பொங்கல் கிழக்கு திசை நோக்கி பொங்கினால், புது வீடு, நிலம் வாங்கும் யோகம் கிட்டும். நினைத்த காரியம் விரைவில் கைகூடும். புது ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்புள்ளது.

மேற்கு

நீங்கள் பொங்கல் வைக்கும் போது மேற்கு திசையில் பொங்கினால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீட்டில் திருமண வயதில் இருப்போருக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

வடக்கு

பொங்கல் வடக்கு திசையில் பொங்கினால், பண வரவு அதிகரிக்குமாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்ளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் சமூகமாக முடிவடையும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கலாம். நீங்கள் கொடுத்த கடன் சிக்கலின்றி திரும்ப கிடைக்கும்.

தெற்கு

தெற்கு திசையில் பொங்கல் பொங்கினால், அந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகரிப்பதோடு, மிகுந்த சோர்வுடன் உணருவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு, திருமணம் சற்று தாமதமாகவே நடக்கும். எனவே, ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பகல் நேரத்தில் தூங்கினால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம். உங்களுக்கு அந்த பழக்கம் இருக்கா?

உங்கள் பிறந்த தேதியை வைத்து அதிர்ஷ்ட நிறத்தை தெரிந்து கொள்ளலாம்…

திருமணம், குழந்தை பாக்கியம் தரும் வேதபுரி தட்சிணாமூர்த்தி திருக்கோயில்…

ZEBRONICS MAX LINK Wireless Gamepad, Dual motors Haptic feedback, Built-in rechargeable battery, RGB light, Plug & play, Supports (Windows | Android)
Recommended for You
ZEBRONICS MAX LINK Wireless Gamepad, Dual motors Haptic feedback, Built-in rechargeable battery, RGB light, Plug & play, Supports (Windows | Android)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,567
தங்கம் (24k)
1 கிராம்
₹15,891
வெள்ளி
1 கிராம்
₹275
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க